மகிந்தவின் பதவி விலகலை தொடர்ந்து அடுத்தகட்ட திட்டத்திற்கு இணங்கினார் கோட்டாபய!
Gotabaya Rajapaksa
Sri Lanka Economic Crisis
Sri Lanka Cabinet
Government Of Sri Lanka
Sri Lankan political crisis
By Kanna
மகிந்தவின் பதவி விலகலை தொடர்ந்து சர்வகட்சி அமைச்சரவையை நியமித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கட்சி சாராத பிரதமர் ஒருவரின் தலைமையில் 15 பேரடங்கிய சர்வகட்சி அமைச்சரவை உருக்கப்படவுள்ளது.
அரச தலைவரின் இவ் முடிவை ஓமல்பே சோபித தேரர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வ மதத் தலைவர்களுடனான சந்திப்பில் அரச தலைவர் இணக்கம் தெரிவித்ததாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் தற்போதைய அமைதியற்ற நிலைமைக்கு முன்னாள் பிரதமர் உட்பட அவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்பதால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு ஓமல்பே சோபித தேரர் சட்டத்தரணிகள் சங்கத்திடம் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்