அமெரிக்காவில் சிக்குவாரா கோட்டாபய..! பயணத்தில் வோஷிங்டன் டீல்
சிறிலங்காவின் அரசியல் களத்தில் கடந்த ஜூலை மாதம் வரை மாற்றுசக்தியாக வர்ணிக்கப்பட்ட முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச இன்னும் ஒரு பயண ஓட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்.
ராஜபக்ச அதிகார மையத்திற்கு எதிராக இலங்கையில் வெடித்த தீவிர போராட்டக் களங்கள் காரணமாக கடந்த ஜூலை மாதம் நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச, அதன் பின் தனது பதவியை துறந்து முன்னாள் அதிபராக மாறியிருந்தார்.
அமெரிக்காவிற்கான விசா
மாலைதீவு, சிங்கப்பூர், தாய்லாந்து என அவரது கசப்பான ஓட்டப் பயணங்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் இந்த நாடுகள் அவர் நினைத்ததைப் போல் வரவேற்காததால் மீண்டும் செப்டம்பர் மாதம் அவர் சிறிலங்கா திரும்பியிருந்தார்.
இதன் பின்னர் கொழும்பிலிருந்து அமெரிக்காவிற்கான விசா பெறும் வேலைத் திட்டங்களை அவர் முன்னெடுத்திருந்தார்.
இந்தப் பின்னணியில் தான் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் விரிவான பார்வையோடும் உலக மற்றும் இலங்கை நிலவரங்களோடும் வருகின்றது இன்றைய செய்தி வீச்சு,


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
