அமைச்சர்களுக்கு கட்டாய பங்கேற்புக்கு அழைப்பு விடுத்துள்ள கோட்டாபய!
sri lanka
meeting
gotabaya
cabinet
By Kalaimathy
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajabaksha) தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டம் நாளை மாலை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது இறுதி முடிவெடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகவே இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்(Mahinda Rajabaksha)ஷ தலைமையில் நேற்றும் அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.