பதுங்கிய கோட்டாபய பொதுவெளிக்கு வந்தார் (படங்கள்)
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
SL Protest
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அதிபர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் தனது முதலாவது பொது நிகழ்வில் இன்று கலந்து கொண்டார்.
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அபயராமயவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய நிகழ்விலேயே கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டார்.
கோட்டாபயவின் வெளியேற்றம்
கடந்த ஜூலை 9 ஆம் திகதி வெடித்த மக்கள் புரட்சியை தொடர்ந்து இலங்கையில் இருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு வழியாக சிங்கப்பூரை சென்றடைந்தார்.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றிருந்தார்.
இவ்வாறு சென்றவர் நீண்ட இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதியளவில் சிறிலங்காவை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி