அரசியல் மீள் பிரவேசம் -மௌனம் கலைத்தார் கோட்டாபய
அரசியலுக்கு பிரியாவிடை வழங்கவில்லை எனவும் தான் நாட்டை விட்டு ஓடவில்லை எனவும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது நடக்கும் விடயங்களை நான் உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன். எனது அரசியல் மீள் பிரவேசம் தொடர்பில் நான்தான் முடிவெடுக்க முடியும். அதில் வேறு எவருக்கும் தலையிட உரிமை இல்லை.
பலருக்கு சவாலாக இருக்கக்கூடும்
எனினும் நான் அரசியலுக்கு மீண்டும் வருவேனா என்பதை தற்போது கூறமுடியாது.எனது அரசியல் பிரவேசம் பலருக்கு சவாலாக இருக்கக்கூடும் என்பதால் அது குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரவுள்ளாரா இல்லையா என்பதை அவர் தான் தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.