கோட்டாபயவின் வீடு முற்றுகையிடப்பட்டு போராட்டம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு, மின் துண்டிப்பு உட்பட விலைவாசி அதிகரிப்பு போன்ற நெருக்கடி காரணமாக பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாட்டின் அரச தலைவரிற்கு தெரியப்படுத்தும் வகையில் அவரது இல்லத்தின் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய பெண்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமசந்திர தலைமையில் பெண்கள் பேருந்தில் சென்று அரச தலைவரின் வீட்டிற்கு முன் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
எனினும் குறித்த போராட்டத்தினை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் போராட்டக்காரர்கள் வீதியில் வீதியில் அமர்ந்து தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
அரச தலைவரின் செயலாளர் ஒருவர் ஆர்ப்பட்ட இடத்திற்கு வருகை தந்து போராட்டம் தொடர்பில் கேட்டறிந்ததாகவும், தங்களின் பிரச்சினைகளை கூறி மனு ஒன்றினைக் கையளித்தாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச்செயலாளர் உமாசந்திர பிரகாஷ் ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
