கோட்டாபய செய்த மிகப் பெரிய தவறு..! அம்பலப்படுத்திய சரத் வீரசேகர
கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் தொற்றை முற்றாக இல்லாதொழிப்பது உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசாங்கம் பொறுப்பேற்றது. அது தொடர்பில் மக்களுக்கு அன்றைய அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லையாயினும் மக்கள் அதனை உணர வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடி நிலைமையை மக்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை இதுவே மிகப் பெரிய தவறு. அதனைச் செய்யாமையே முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச விட்ட தவறு. கோட்டாபய ராஜபக்சவும் தற்போது அதனை உணர்ந்திருப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், " பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு இனம், மதம், கட்சி பேதங்களை மறந்து ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ", எனக் குறிப்பிட்டார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
