சிறிலங்காவில் இருந்து தப்பியோடிய கோட்டாபய! நீண்ட நாட்களின் பின்னர் தாய்லாந்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகின
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்து சென்றடைந்துள்ளதாக சர்வதசே ஊடகம் செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ச இரவு 8 மணியளவில் தாய்லாந்து பேங்கொக்கின் டான் முயாங் விமான நிலையத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் செலிடார் விமான நிலையத்திலிருந்து அவர் விமானத்தில் தாய்லாந்துக்கு சென்றுள்ளார்.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது பாரியார் தாய்லாந்து விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய புகைப்படங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக கடும் போராட்டங்கள் வெடித்துடன் கடந்த ஜூலை 9 ஆம் திகதி போராட்டகாரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதனையடுத்து இரண்டு நாட்களில் கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு சென்றதுடன் அங்கிருந்து ஜூலை 14 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றார்.
கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார். ஆட்சிக்காலத்தின் பாதியில் பதவியில் இருந்து விலகிய முதல் இலங்கை அதிபர் என்ற வரலாற்றையும் கோட்டாபய உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் அரசாங்கம் கோடாபியாவுக்கு வழங்கிய விசா காலம் இன்றுடன் முடிவடைகின்ற நிலையில், சிங்கப்பூரில் இருந்து இன்றைய தினம் தாய்லாந்தின் பேங்கொக் நகருக்கு செல்ல எண்ணியுள்ளதாக நேற்று தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தன.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து இன்று மாலை வெளியேறியுள்ளதாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அவர் தற்பொழுது தாய்லாந்தை சென்றடைந்ததுடன் தாய்லாந்து விமான நிலையத்தில் இருந்து கோட்டாபய வெளியேறும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளளமை சுட்டிக்காட்டத்தக்கது.