மகிந்த மற்றும் கோட்டாபய திடீர் சந்திப்பு
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lankan Peoples
By Dilakshan
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்தவை சந்தித்துள்ளார்.
தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு நேற்று சென்ற கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி, மகிந்தவுடன் நீண்ட நேரம் உரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் நிலைமை
இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த உரையாடலின் போது, அதிகமாக குடும்ப விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன், தற்போதைய அரசியல் நிலைமை குறித்தும் சற்று கவனம் செலுத்தப்பட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் பிறகு, கோட்டாபய ராஜபக்ச கொழும்புக்கு மீண்டும் புறப்பட்டதாகவும் தெரியவருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
