சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணிந்து கோட்டாபய எடுத்த முடிவு! - அமரசேகர பகிரங்கம்
நாட்டில் தற்போது அமைக்கப்படவிருப்பது கோட்டா - ரணில் அரசாங்கமே அன்றி இடைக்கால அரசாங்கமோ, தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கமோ அல்ல என சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்படும் அரசாங்கம் எந்த திசை நோக்கி செல்லும் என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
புதிய அரசாங்கம், சந்திரிகா - ரணில், மைத்திரி- ரணில் அரசாங்கங்களுக்கு இணையானது.
அரசியல் கட்சிகளுடன் கூடிய நிறைவேற்றுச் சபையால், பிரதமர் தெரிவு செய்யப்படவில்லை என்பதால், இது அரச தலைவரின் தனிப்பட்ட முடிவாக கருத நேரிடும். பெரும்பாலும் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிப்பணிந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த முடிவை எடுத்திருக்கலாம்.
இது தொடர்பான மேலதிக செய்திகளுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
