தலைமறைவான அரச தலைவர் கோட்டாபய - ஆளும் தரப்பு எம்.பி தகவல்
Chandima Weerakkody
Gotabaya Rajapaksa
Sri Lanka Social Media
By Sumithiran
தலைமறைவான அரச தலைவர்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவான அரச தலைவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த எவருக்கும் அரச தலைவரை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெகுசன ஊடகங்களே ஒரே வழி
எனவே, மக்கள் பிரச்சினைகளை அரச தலைவருக்கு தெரிவிப்பதற்கு வெகுசன ஊடகங்களே ஒரே வழி என தெரிவித்த அவர், ஊடக நிறுவனங்களுக்கு எரிபொருளை பறிப்பதன் மூலம் அந்த வாய்ப்பையும் பறிக்கிறார்கள் என்றார்.