கோட்டாபயவுக்காக பதவியை துறப்பேன்! ஆளும் கட்சி எம்.பி பகிரங்க அறிவிப்பு
Sri Lanka Parliament
Gotabaya Rajapaksa
Sri Lanka
By pavan
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவதாக இருந்தால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தயாராக இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.
மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து கோட்டாபய இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என சீதா அரம்பேபொல கூறியுள்ளார்.
அவரது நாடாளுமன்ற வருகை குறித்து சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் எந்தவொரு கலந்துரையாடலையும் அவர் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் மீண்டும் வருவார் என்பது குறித்து தமக்கு எந்தவொரு நம்பிக்கையும் இல்லையெனவும் சீதா அரம்பேபொல குறிப்பிட்டுள்ளார்.
பொய்யான கருத்துக்கள்
அதேவேளை, முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை குறித்து ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துக்கள் பொய்யானவை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி