யாழ்ப்பாணத்திற்கு சென்று சாட்சியமளியுங்கள்! கோட்டாபயவுக்கு உத்தரவு
புதிய இணைப்பு
2011 ஆம் ஆண்டு காணாமல் போன செயற்பாட்டாளர்கள் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான வழக்கில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இன்று உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தார்.
எனினும், பாதுகாப்பு காரணங்களைக் காரணம் காட்டி விசாரணையை கொழும்பில் நடத்துமாறு கோரியுள்ளார்.
எனினும், நீதியரசர்கள் கொண்ட அமர்வு அதனை தள்ளுபடி செய்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
மேல்முறையீட்டின் விசாரணை
கோட்டபய சாட்சியமளிக்கத் தயாராக இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பில் சாட்சியமளிக்கக் கோரியதாக அவரது சட்ட ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காணாமல் போன செயற்பாட்டாளர்களின் பெற்றோர் சார்பில் முன்னிணையான, சட்டத்தரணி நுவான் போபேஜ் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டின் விசாரணையின் போது இந்த நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஹேபியஸ் கார்பஸ் வழக்கில் சாட்சியாக முன்னிலையாகுமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கோட்டாபயவுக்கு 2019 ஆம் ஆண்டு பிறப்பித்த மனுவை இரத்து செய்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு மனுதாரர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன்படி மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு ராஜபக்சவின்வின் தற்போதைய நிலைப்பாட்டின் அடிப்படையில் பொருத்தமான வழிமுறைகளைக் கோரி நான்கு வாரங்களுக்குள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த ஏற்பாட்டிற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதால், உயர் நீதிமன்றம் தற்போதைய மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
முதலாம் இணைப்பு
2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு ஒன்று குறித்து சாட்சி வழங்க தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
குறித்த அறிவிப்பை இன்று (30) தனது சட்டத்தரணிகள் மூலம் உயர் நீதிமன்றத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கானது, காணாமல் போன இரண்டு மனித உரிமை ஆர்வலர்களினதும் உறவினர்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
அதன்படி, இந்த விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா
