கட்சித் தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு!
புதிய இணைப்பு
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக மறுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் டுவீட் செய்துள்ளார்.
குறித்த டுவீட்டில், "எவ்வாறாயினும் கோரிக்கைக்கு இணங்க பதவி விலகுமாறு அரச தலைவர் மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுத சபாநாயகர் தீர்மானித்துள்ளார்" என ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.
Correction to my earlier tweet on consensus to ask PM and President to resign. No consensus as PM disagrees. Speaker however decided to write to President and PM to resign as per overwhelming request.
— Rauff Hakeem (@Rauff_Hakeem) July 9, 2022
முதலாம் இணைப்பு
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்ற சபாநாயகர் தற்காலிக அரச தலைவராக பதவியேற்பார் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், அரச தலைவர் மற்றும் பிரதமர் ஆகிய இருவரையும் பதவி விலகுமாறு கோருவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
At Speaker’s Residence urgent Party Leader’s meeting. Several other Leaders including PM, AKD and Sumanthiran participated via zoom. Decision to ask both President and PM to resign. Speaker to take over as temporary President according to constitution. pic.twitter.com/RyauaIvCei
— Rauff Hakeem (@Rauff_Hakeem) July 9, 2022
இதேவேளை, அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சித் தலைவர்கள் உடனடியாக இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தனது டுவீட்டில் மேலும் தெரிவித்தார்.
இதில் சில குளறுபடிகள் இருப்பதாகவும், பல மாற்று வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
சபாநாயகரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
