கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு தொடர்ந்தும் சிறை!
Gotabaya Rajapaksa
Sri Lankan Peoples
Law and Order
By Dhilak
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர பண்டாரவை, எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று(09) இந்த உத்தரவை விடுத்துள்ளார்.
கைதுக்கான காரணம்
ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளுக்கான ஊதியத்தைப் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, அவருக்கு பிணை வழங்குவதை நியாயப்படுத்தும் வகையிலான எந்தவொரு சிறப்பான காரணங்களும் முன்வைக்கப்படவில்லை என்று தீர்மானித்த நீதவான், அவரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்