யாழில் பயங்கரம் : நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பியவர் மீது வாள்வெட்டு

Jaffna Sri Lanka Police Investigation Crime
By Theepan Sep 09, 2026 04:12 PM GMT
Report

ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9) பிற்பகல் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக பாதிக்கப்பட்ட இளைஞர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

காவல்துறையின் அறிவிப்பு

 வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அவர் வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, வேலணை அராலிச் சந்தி பகுதியில் அவரை வழிமறித்த மற்றைய தரப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழில் பயங்கரம் : நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பியவர் மீது வாள்வெட்டு | Sword Attack In Jaffna

தாக்குதலாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலர் தற்போது கிளிநொச்சி பகுதியில் வசித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு அனுப்பிய யாழ்ப்பாண படகோட்டி : நீதிமன்றின் உத்தரவு

இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு அனுப்பிய யாழ்ப்பாண படகோட்டி : நீதிமன்றின் உத்தரவு

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி

தாக்குதலில் கடும் காயமடைந்த இளைஞர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் பயங்கரம் : நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பியவர் மீது வாள்வெட்டு | Sword Attack In Jaffna

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இறுதிச்சடங்கிற்கு சென்று கொண்டிருந்த தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த துயரம்

இறுதிச்சடங்கிற்கு சென்று கொண்டிருந்த தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த துயரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026