இந்தியாவை ஊடறுத்து கடக்கும் காற்றழுத்த தாழ்வு! தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று (25) நீலகிரி மாவட்டத்திற்கு அதீத கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து வருவதால் அடுத்த 3 நாட்களுக்குப் பரவலாகக் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று கனமழைக்கான வாய்ப்பு
கேரளா, மாஹே, லட்சத்தீவு, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று கன முதல் மிகக் கனமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஆந்திரப் பிரதேசம், கடலோர கர்நாடகா மற்றும் தெற்கு உள் கர்நாடகா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவல்படி, சத்தீஸ்கர், கடலோர கர்நாடகா மற்றும் விதர்பா ஆகிய பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மின்னல் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |