ஜனாதிபதி கோட்டாபய வழங்கியுள்ள விசேட அறிவுறுத்தல்!!
தொற்றா நோயுடையவர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுகாதார பிரிவிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அறுபது வயதுக்கும் மேற்பட்ட மற்றும் நீண்ட நாட்களாக தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் எனவும் அவ்வாறானர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
அண்மைய நாட்களில் நாட்டில் இடம்பேற்ற கொவிட் மரணங்களில் பெரும்பாலானவை 60 வயதுக்கும் மேற்பட்ட மற்றும் தொற்றா நோயுடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
எனவே 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் தொற்றா நோயுடையவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு விசேட செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கொவிட் தடுப்பு செயலணியின் உறுப்பினர்களுடன் இன்றைய தினம் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.