சிங்கள தரப்புக்கு விழுந்த மரண அடி!! திக்குமுக்காடும் கோட்டாபய
ஸ்ரீலங்கா அரசியல் பரப்புக்குள் பெரும் ஆர்ப்பரித்த அலையாக உருவெடுத்து வந்த கோட்டாபய ராஜபக்ச மெல்ல மெல்ல தன் செல்வாக்கை இழந்து கொண்டிருக்கும் சூழலை எட்டியிருக்கிறார்.
இலங்கை அரசியலில் பெரும் ஹீரோவாக தென்னிலங்கை ஊடகங்களால் புடம் போட்டு காட்டப்பட்டு, பௌத்த சிங்கள மீட்பர்களின் தேவனாக சித்தரிக்கப்பட்டவர் தான் இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
ஆனால், அத்தனையையும தலைகீழாக மாற்றியிருக்கிறது அண்மைய நிகழ்வுகள். எதை முன்னிலைப்படுத்தி தேர்தலில் வெற்றிவாகை சூடினார்களோ அதையே அவர்களின் வீழ்ச்சிக்குமான படியாக மாறிக் கொண்டிருக்கிறது.
எது எப்படியிருந்த போதிலும், தூய மீட்பர் என்று உருவெடுத்த கோட்டாபய இன்று சரிவை சந்தித்து தூற்றல்களுக்கு உள்ளாகியிருக்கிறார். இருபது ஆண்டுகள் அசைக்க முடியாது என்றனர். இரண்டு ஆண்டுகளிலேயே கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் உள்ளாகியிருக்கிறார் அவர்.
இவ்வாறு வீழ்ச்சி நிலைக்கு சென்றுகொண்டிருக்கும் ராஜபக்ச அரசின் தற்கால நிலை தொடர்பில் ஆராய்கிறது இந்த ஒளியாவணம்,