கோட்டாபய தலைமையில் இன்று விசேட பேச்சுவார்த்தை
meeting
Special
Gotabaya
talk
interim govt
By Vanan
அரசாங்கத்தில் இருந்து அண்மையில் விலகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் இடைக்கால நிர்வாகத்தை அமைப்பது தொடர்பில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்துரையாடவுள்ளார்.
அரச தலைவர் செயலகத்தில் இன்று இரவு 7 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்று மாலை கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா உறுதிப்படுத்தினார்.
எனினும் அரச தலைவருடன் இன்று மாலை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது தொடர்பில் தமது குழு இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை என அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி