கோட்டாபய நாடு திரும்பும் திகதி வெளியானது
நாடு திரும்பும் கோட்டாபய
தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கொழும்பில் இன்று (25) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தவறுதலாக இம்மாதம் 24ஆம் திகதி இலங்கைக்கு வருவாரென தான் கூறியதாக வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு திரும்புவதில் தாமதம்
ராஜபக்ஷவின் தவறு காரணமாக அவர் இலங்கைக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் அதிபரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டவுடன் நாடு திரும்புவார் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எப்போது நாடு திரும்புவார் என்று தனக்கு தெரியாதென பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.