கோட்டாபய நியமித்த செயலாளரை பதவியிலிருந்து நீக்கினார் மகிந்த
Gotabhaya Rajapaksa
Aluthgamage Mahindananda
By Vasanth
விவசாய அமைச்சின் செயலாளராக பதவி வகித்து வந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா அந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
தனிப்பட்ட காரணங்களால் அவர் கடந்த வாரம் ராஜினாமா செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேஜர் ஜெனரல் பெரேரா கடந்த ஆண்டு மே மாதம் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவால் விவசாய அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஸ்ரீலங்கா இராணுவத்தின் பிரதி தலைமை தளபதியாக இருந்து இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
அவரது பதவி விலகல் தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, அமைச்சின் வேகத்திற்கு ஏற்றவகையில் அவரால் செயற்பட முடியவில்லை என்பதால் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு மேஜர் ஜெனரல் பெரேராவிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.