நிபுணர் குழுவின் அறிக்கை கோட்டாபயவிடம் கையளிப்பு
srilanka
gotabhaya
By Vasanth
திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
திண்மக்கழிவு முகாமைத்துவம் உலகின் பல நாடுகளுக்கும், இலங்கைக்கும் ஒரு பெரிய பிரச்சினையாகும். முறையாக முகாமைத்துவம் செய்யப்படாத திண்மக்கழிவுகள் காரணமாக சுற்றுச்சூழல் மற்றும் நீர் மாசடைதல் மற்றும் மண்ணில் பல்வேறு இரசாயனங்கள் சேர்தல் போன்ற பல பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன.
கழிவு முகாமைத்துவம் தொடர்பான சிக்கல்களைக் கண்டறிந்து தீர்வுகளை முன்வைக்க ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த ஜூலை மாதம் 14 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
குறித்த குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
3ம் ஆண்டு நினைவஞ்சலி