தோல்வியில் ராஜபக்ஷ அரசு - ருவன் விஜேவர்தன பகிரங்க குற்றச்சாட்டு
தற்போதைய அரசு தோல்வியடைந்த அரசாங்கமாக தன்னை வெளிப்படுத்தியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
சீதுவை ரமடா ஹோட்டலில் இன்று இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், மூன்று மாத காலத்திற்கு சில பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு சதொச மூலமாக மக்களுக்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு மட்டுமா இவ்வாறு வழங்கப்படும்? கல்வித்துறையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு கூட இன்னும் சீருடை வழங்கப்படவில்லை. அரசாங்கம் தற்போது சர்வதேசத்தையும், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் காரணமாக இந்தியாவையும் - ஜப்பானையும் பகைத்துக் கொண்டுள்ளது.
உள்நாட்டு மக்களையும் பகைத்துக் கொண்டு வெளிநாடுகளையும் பகைத்துக் கொண்டுள்ள இந்த அரசு தோல்வியடைந்த அரசாங்கமாக தன்னை வெளிப்படுத்தியுள்ளது என்றார்.