ஒடுக்கு முறைகளை பயன்படுத்தும் கோட்டாபயவிற்கு நாட்டை ஆளும் தகுதி இல்லை!
People
Sajith Premadasa
SJB
Social Media
Gotabaya
People Protest
By Chanakyan
பேச்சுசுதந்திரத்தால் நீங்கள் அச்சுறுத்தப்பட்டால் நீங்கள் நாட்டை ஆள்வதற்கு தகுதி சிறிலங்கா கோட்டாபய ராஜபக்சவி்கு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களின் வருகைக்கு முன்னரும் நாட்டில் புரட்சிகள் காணப்பட்டன.
கோட்டாபய ராஜபக்ச மீதும் அரசாங்கத்தின் மீதும் காணப்படும் கோபம் வெறுப்பலைகளை தடுப்பதற்கு சமூக ஊடக தடையால் எதனையும் செய்ய முடியாது.
பேச்சுசுதந்திரத்தால் நீங்கள் அச்சுறுத்தப்பட்டால் நீங்கள் நாட்டை ஆள்வதற்கு தகுதியற்றவராகவே கோட்டாபய காணப்படுகின்றார் என அவர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி