கோட்டாபயவுடன் சீன பாதுகாப்பு அமைச்சர் முக்கிய கலந்துரையாடல்
இலங்கைக்கு இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்த சீன பாதுகாப்பு அமைச்சர் இன்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சந்திப்புக்கு பின்னர் கருத்து வெளியிட்ட சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ பெங், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் தனக்கும் இடையிலான இருதரப்பு பேச்சு மிகவும் பலனளிப்பதாக இருந்ததாக தெரிவித்தார்.அத்துடன் தனது இந்த விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
சீன பாதுகாப்பு அமைச்சர் வீ ஃபெங் சிறப்பு விருந்தினர்களுக்கான பதிவேட்டிலும் கையெழுத்திட்டார்.
இந்த சந்திப்பில் இலங்கை சார்பில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர , வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும்
சீன தரப்பில் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங், துணைப் பணியாளர் மற்றும் சீன மக்கள் இராணுவத்தின் கூட்டுத் தலைவர்களின் சர்வதேச விவகார பணிப்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் ஷாவோ யுவான்மிங், லெப்டினன்ட் , மேஜர் ஜெனரல் ஜி குயோய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
