யாழில் வேலை தேடுபவர்களா நீங்கள் ..! வெளியான முக்கிய அறிவிப்பு
யாழ்.(Jaffna) மாவட்டத்தில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து, தத்தமது கல்வித் தகுதிக்கேற்ப தொழில் தேடிக்கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்காக மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வொன்று இடம்பெற்று வருகிறது.
இந்த தொழிற்சந்தை நிகழ்வானது யாழ் .மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் (08.03.2025) நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வில், உரையாற்றிய யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீமோகன், தத்தமது கல்வித் தகுதிக்கேற்ப தொழில் தேடிக்கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகள் இந்த தொழிற் சந்தையை தமக்கானதாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
தொழில் தேடுநர்கள்
தொழில் வழங்குநர்கள் மற்றும் தொழில் தேடுவோரை ஒன்றிணைத்து இளைஞர் யுவதிகளின் தொழிற் தேடுதலுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் களமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
அத்துடன், இதை எமது பகுதி தொழில் தேடுநர்கள் தமது எதிர்காலம் கருதியதாக பயன்படுத்தி வெற்றிகாண வேண்டும்.”என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தொழிற்சந்தை நிகழ்வானது யாழ். மாவட்ட செயலகம் மற்றும் மனிதவள வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |












நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்