வடக்கில் கல்விப் பணிப்பாளர் பதவி வெற்றிடங்கள் : கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
மாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக உயரக் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அவ்வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக தகைமையுடைய உத்தியோகத்தர்களிடம் இருந்து நாடளாவிய ரீதியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதன்படி மேல், கிழக்கு மற்றும் வடமாகாண மாகாண கல்விப் பணிப்பாளர் பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
இலங்கை கல்வி
குறித்த பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர், இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தரம் 1 இல் 5 வருடங்களுக்கும் குறையாத திருப்திகரமான சேவைக்காலத்தைக் கொண்ட உத்தியோகராக இருத்தல் வேண்டும்.
மேலும், சகல தகைமைகளையும் விண்ணப்பங்கள் பொறுப்பேற்கப்படும் இறுதி தினத்தன்று அல்லது அதற்கு முன்னதாக பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
இந்த பதவிகளுக்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் 03.03.2025 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் என்று உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான முழுமையான விடயங்களை கீழ் உள்ள இணைப்பில் பெற்றுக் கொள்ள முடியும்
📌 மாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவி வெற்றிடம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
