யாழ்.பல்கலை விவகாரம்: அநுர அரசின் முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக(University of Jaffna) விவகாரம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அநுர அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று(28) இடம்பெற்று வரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக விவகாரம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“பல்கலைக்கழக செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவித செயற்பாடுகளுக்கும் இடமளிக்க போவதில்லை.

அதேபோன்று தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்வதானால், தொழிற்சங்க நடவடிக்கைக்கு முன்னர் அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
பேச்சுவார்த்தையின் பின்னர் அடுத்தக்கட்டம் தொடர்பில் சிந்திக்கலாம். ” என அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        