அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அரசாங்கத்தின் அடுத்தகட்ட நகர்வு
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தற்போது ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) கருத்து வெளியிடுவதற்கு அவருக்கு எவ்வித அறுகதையும் இல்லையென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கணேசமூர்த்தி கடுமையாக சாடியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரச ஊழியர்கள் தங்களது சம்பளத்தை அதிகரித்து தருமாறு பாரிய போராட்டங்களை எல்லாம் முன்னெடுத்த போது அமைதிகாத்த ரணில் அரசாங்கம், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்தினார்.
இவ்வாறான ஒரு நடவடிக்கையின் மூலம் அவர் தேர்தல் சட்டத்தை மீறி இருப்பது அப்பட்டமாக புலப்படுகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை தான் அதிகரித்ததாக ரணில் கூறிக்கொண்டு திரிவது அப்பட்டமான பொய்” என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |