மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைவடையப்போகும் வற் வரி
Sri Lankan Peoples
Value Added Tax (VAT)
By Dilakshan
தற்போது 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியினை(vat) குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அரசாங்கத்தை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
அதன்போது, தற்போதைய 18% பெறுமதி சேர் வரியை 3% குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதிய திட்டத்துடன் அரசாங்க வருவாயை உயர்த்துவதற்காக கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பெறுமதி சேர் வரி 18 வீதம் அதிகரிக்கப்பட்டது.
வரி வருமானம்
எவ்வாறாயினும், பெறுமதி சேர் வரி மூன்று வீதத்தால் குறைக்கப்பட்டால், வரி வருமானம் முன்னூறு பில்லியன் ரூபாவால் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்