வனப்பகுதியில் இருந்து T-56 துப்பாக்கி மீட்பு
Anura Kumara Dissanayaka
Ranil Wickremesinghe
By Thulsi
மாத்தளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சுது கங்கை வனப்பகுதியில் பயணப் பொதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மாத்தளை காவல்து நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் குழு நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, நேற்று (29) மாலை இந்த துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
குறித்த இடத்தில் T-56 துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்களைக் கைது செய்ய மாத்தளை காவல்துறையினர்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பதில் காவல்துறை மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், நாடு முழுவதும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்படும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை இணைந்ததாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி