தமிழ் மக்களின் காணிகள் தொடர்பில் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கை

Sri Lankan Tamils Bimal Rathnayake
By Independent Writer Feb 10, 2026 01:40 PM GMT
Report
Courtesy: Kabil

வடக்கு மாகணத்தில் படையினர் மற்றும் அரசின் கீழ் உள்ள காணிகளை தேவையின் அடிப்படையில் பாதுகாப்பு படையினரின் சம்மதத்துடன் மீளவும் பொதுமக்களுக்கு வழங்கவுள்ளோம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த அவர்,

“60 மாதங்கள் பணியாற்றுவதற்காக எமது அரசாங்கம் அமைக்கப்பட்டுளளது. கடந்த காலங்களிலே அரசாங்கங்கள் வழங்கிய நிதியை விட தற்போது டித்வா சூறாவளியால பாதிக்கப்பட்ட மக்களிற்கு பெருமளவான நிதியினை வழங்கியுள்ளோம்.

தமிழரசு கட்சியில் மீளவும் அனந்தி..! தாயக அரசியல் திரைமறைவில் அதிர்ச்சி சம்பவங்கள்

தமிழரசு கட்சியில் மீளவும் அனந்தி..! தாயக அரசியல் திரைமறைவில் அதிர்ச்சி சம்பவங்கள்

வறுமைக்குட்பட்ட மக்கள்

குறிப்பாக எமது அரசாங்கத்தினால் பணத்தினை மிதப்படுத்தியமையாலே வழங்க முடிந்தது. மேலும் வறுமைக்குட்பட்ட மக்களின் தன்மையை அறிந்து கொள்ளக்கூடிய ஜனாதிபதி இருப்பதனால் இது நடந்தது.

குறிப்பாக டித்வா புயலில் அழிவடைந்த வீடுகளிற்கு ஐம்பது இலட்சம் வழங்கவுள்ளார் என்பதை எங்களால் கூட நம்ப முடியாது இருந்தது.

ஒரு வீட்டினை மட்டும் உள்ளவர்களின் வீடுகள் அழிவடையும் போது அவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று எங்களிற்கு புரியும்.

இது வவுனியாவில் ஒரு வீடு, கொழும்பில் ஒரு வீடு மற்றும் இலண்டனில் ஒரு வீடு இருப்பவர்களிற்கு தெரியாது. இதன் காரணமாகவே அழிவடைந்த வீட்டிற்கு ஐம்பது இலட்சம் ரூபாவும், அதற்கு மேலேயும் வழங்குவதற்கு தீர்மானித்தோம்.

மேலும் டித்வா சூறாவளி காலத்திலேயே சம்பளத்தையும் அதிகரித்திருந்தோம். அத்தோடு மலையக தொழ்லாளர்களுக்கு 200 ரூபாய் அரசாங்கம் வழங்கியதன் ஊடாகவே 1700 ரூபாய் வழங்கப்படவுள்ளது.

குறிப்பாக எங்களுடைய நாட்டை நாங்கள் தான் கட்டியெழுப்ப முடியும் மாறாக வேறு யாரும் அதனை செய்ய முடியாது. இலங்கையை கட்டியெழுப்ப யாருமே பெரிய அளவில் உதவி செய்ய போவதில்லை.

யாழில் துப்பாக்கிசூட்டில் பலியான சிறுவன் பயணித்த வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட வாள்

யாழில் துப்பாக்கிசூட்டில் பலியான சிறுவன் பயணித்த வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட வாள்

ராஜபோக வாழ்க்கை

சில நாடுகள் குறிப்பிட்டளவு நிதியினை வழங்கிய போதும் முழு நாட்டையும் கட்டியெழுப்ப போதுமானதாக இருக்காது. நீங்கள் அனைவரும் இணைந்து 75 வருடகால மோசடியான அரசினை இல்லாது செய்துள்ளீர்கள்.

அத்தோடு நான்கு திசையை உள்ளடக்கிய நல்ல கட்டமைப்பை கொண்ட அரசாங்கத்தை உருவாக்கியுள்ளீர்கள். அதிகளவான மக்கள் எங்கள் அரசின் மீது ஆர்வமாக உள்ளனர்.

ஆனால் இவ் அரசை யார் எதிர்க்கின்றனர். குறிப்பாக கடந்த காலத்தை போல் சௌகரியமாக இருக்க முடியாத ராஜபக்சர்கள், ஐக்கிய மக்கள் சக்தியினரே.

குறிப்பாக ஒரு குடும்பமே ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள் அது தற்போது முடியாது உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியினர் பொய் கூறுவதோடு எங்களையும் பேசுகின்றார்கள்.

இவ்வாறானவர்களிற்கு உடந்தையாக இருந்த சிறு தொகை அதிகாரிகளும் எதிர்க்கின்றனர். இருந்த போதும் இனவாதம் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் எமக்கு எதிராக இல்லை” என தெரிவித்துள்ளார். 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020