பெண் உட்பட மூவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
பெண் உட்பட மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியைக் கோரி நிற்கின்றனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணையொன்று தொடர்பிலேயே இந்த சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
தப்பிச்சென்று தலைமறைவு
இந்த சந்தேக நபர்கள் தற்போது தங்களது வசிப்பிடங்களிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளனர்.

இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். அல்லது, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளரின் 0718 592 167 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் தகவல்களை அறிவிக்க முடியும்.
சந்தேக நபர்கள் தொடர்பான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன,
ராஜபக்சபத்திரணகே ஹிமாலி செவ்வந்தி
இல. 12, 4 ஆவது கட்டம், ஒபேசேகர வீதி, கல்கிஸ்ஸ
தேசிய அடையாள அட்டை இல - 199880503210
ராஜபக்ச பத்திரணகே தரிந்து ஜீவந்த
தே.அ.அ. இல - 200430904977
பத்தேகம பத்திரணகே விராஜ் நிமஷ்க
இல. 16, 4 ஆவது கட்டம், அபேசேகர பெதஸ, கல்கிஸ்ஸ
தே.அ.அ. இல - 199532800493
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |