ஜூலை மாதம் முதல் அதிகரிக்கப்போகும் மற்றுமொரு கட்டணம் - விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கையில் பேருந்து பயண கட்டணத்தை உயர்த்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் தனியார் பேருந்து சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும்ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கட்டணத்தை உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உதிரி பாகங்கள், வாகன குத்தகை ஆகியவற்றின் வட்டி விகிதங்கள் அதிகரிப்பின் அடிப்படையில் பேருந்து சங்கத்தினால், பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டணங்களை குறைக்கும் யோசனை
மேலும், தற்போதைய நிலையில் பேருந்து கட்டணங்களை குறைக்கும் யோசனையை முன்வைக்க முடியாது எனவும் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை, ஜூலை மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ள வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் இந்த வாரத்திற்குள் வழங்கப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
