அரசுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பலைகள் - எதிரணி எம்.பி சுட்டிக்காட்டு
அரங்காத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டில் வைரஸ் தொற்று, மரணம், பசி பட்டினி என்பன தான் எமது நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது. நாட்டில் ஆசிரியர்கள் வீதிகளில் இறங்கிப் போடுகிறார்கள், விவசாயிகளுக்கு உரம் இல்லாத காரணத்தினால் அவர்களின் உற்பத்திகள் வீழ்ச்சியடைந்து நட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும் வீதிகளில் இறங்கி போடுகின்றார்கள்.
மாணவர்களின் எதிர்காலம் தொடர்பில் அரசாங்கம் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை.
நாட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கவென ஆட்சிப் பீடம் ஏறியவர்கள், இருந்த பிரச்சனையை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளார்கள். சிங்கள கதையில் வரும் மாதன முத்தாக்கள் போல் உள்ளது இன்றைய ஆட்சியாளர்களின் செயற்பாடுகள்.
அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு வெளியிடத் தொடங்கியுள்ளார்கள். மிக விரைவாகவே இந்த அரசாங்கம் மக்கள் எதிர்ப்பினை சம்பாதித்துள்ளது.
அரசாங்கத்திடம் போதிளவு பணம் இருப்பதாக பிரபல அமைச்சர்கள் ஊடக சந்திப்புக்களில் தெரிவித்து வருகின்றனர்.
அப்படி என்றால் ஆசிரியர்களின் பிரச்சனைக்கு தீர்வினை வழங்கி, மாணவர்களின் எதிர்காலத்தினை பாதுகாக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.