பிரான்சில் 20 மாவட்டங்கள் தொடர்பில் அரசு முக்கிய அறிவிப்பு!
பிரான்சில் குறிப்பிட்ட 20 மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவரை தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் பிரதமர் Jean Castex மற்றும் சுகாதார அமைச்சர் Olivier Véran ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, கொரோனா தொற்று அதிகம் கொண்ட 20 மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மாவட்டங்களில் முழு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை என்றாலும், மிகவும் தீவிரமான கண்காணிப்பு வலையத்திற்குள் தான் இந்த மாவட்டங்கள் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இணைந்து ஊடக சந்திப்பு ஒன்றினை நிகழ்த்தினர். இது தொடர்பான உடனுக்குடனான செய்திகளை எமது பரிஸ் தமிழ் இணையம் ஊடாக நேரலையாக அறிந்து கொண்டிருந்தீர்கள். இன்றைய அறிவிப்பில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவற்றின் முக்கிய சாராம்சம் இதோ.
கொரோனா தொற்று அதிகம் கொண்ட 20 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த மாவட்டங்களில் முழு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை என்றபோதும், மிக தீவிரமான கண்காணிப்பு வலையமாக அவை அறிவிக்கப்பட்டுள்ளன. தினமும் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றுக்களில் 40 சதவீத்திற்கு அதிகமானவை பிரித்தானிய வகை கொரோனா வைரசாகும்.
தற்போது வரை 75 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களில் கால்வாசியானோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக கூறும் பிரதமர், மே மாத நடுப்பகுதியில் இருந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் எனவும் அறிவித்தார்.
Nice மற்றும் Dunkerque மாவட்டங்களில் ஊரடங்கு தொடரும் எனவும், முறையான அனுமதி சான்றிதலுடன் பொதுமக்கள் வெளியில் பயணிக்க முடியும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.