பட்டதாரிகளுக்கான அரச நியமனங்கள் குறித்து கேள்வியெழுப்பிய அர்ச்சுனா எம்.பி
2020, 2021 காலப்பகுதியில் வழங்கப்பட்ட முறைகேடான அரச உள்வாரிப் பட்டதாரிகளுக்கான அரசாங்க நியமனம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) உரையாற்றியுள்ளார்.
அத்துடன் முதலாவது நியமனத்திற்காக மீண்டும் ஒரு போட்டிப்பரீட்சையை எதிர்கொள்வது கவலைக்குரியது என பட்டதாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இன்றைய (11) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்ட அவர் இந்த விடயம் குறித்து, உயர்கல்வி அமைச்சரிடம் பின்வருமாறு கேள்வியெழுப்பினார்.
1. 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்ததா? எத்தனை வேலை வாய்ப்புக்கள் எந்தெந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன?
2. 2014 ஆம் ஆண்டு பல்கலைக்கழக கற்கைநெறிகளுக்கு உள்வாங்கப்பட்ட யாழ்ப்பாணம், பேராதனை மற்றும் கிழக்கு பல்கலைக்கழக பொது, விசேட பட்டதாரிகளுக்கு அந்த நியமனத்தில் உன்வாங்கல்கள் நடந்ததா? எத்தனை மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர்?
3. 2014 ஆம் ஆண்டு பல்கலைக்கழக நுழைவிற்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் 2020 ஆம் ஆண்டு தங்கள் கல்விப் பட்டங்களை முடிக்கவில்லை என்பதையும் மேறகுறித்த 3 பல்கலைக்கழகங்களை தவிர்ந்த ஏனைய பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டமை அரசாங்கத்தின் குறைபாடு என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? கடந்த அரசின் குறைபாடுகளை இந்த அரசாங்கம் ஏதும் நடவடிக்கை எடுத்துள்ளதா?
4. மேல் மாகாணத்தில் ஆளுநரின் செயற்பாட்டினால் HNDE கற்கைநெறி மாணவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டதா?
5.வடமாகாண பாடசாலைகளில் இரண்டாம் மொழியாக சிங்களப் பாட ஆசிரியர் வெற்றிடங்கள் 400 உள்ள நிலையில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் சிங்களப் பாடநெறியை இரண்டாம் மொழியாக கற்றவர்களுக்கு ஏன் நியமனம் வழங்கப்படவில்லை?
6.வடமாகாணத்தில் இருக்கின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வட மாகாண ஆளுநருக்கு அதிகாரம் இருந்து போதும் ஆளுநர் வழங்கிய பொருத்தமற்ற பதில் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
