கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தின் மீது கல்வீச்சு தாக்குதல்
கொழும்பு, புதுக்கடை உயர் நீதிமன்றத்தின், 8 ஆம் இலக்க வளாகத்திற்கு அருகிலுள்ள பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் கல்வீச்சி தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (09) இரவு அடையாளம் தெரியாதவர்களால் இவ்வாறு கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில், அதைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட தனியார் பாதுகாப்பு சேவையின் அதிகாரி ஒருவரால் வாழைத்தோட்ட காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கற்களால் தாக்குதல்
இந்நிலையில் செங்கற்கள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வீச்சு தாக்குதலால் நீதிமன்றத்தின் கண்ணாடி உடைந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சம்பவம் குறித்து வாழைத்தோட்ட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
