தொன் கணக்கில் சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்
மூன்று இலட்சம் மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த (K. D. Lalkantha) தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட மேம்பாட்டுக் குழு கூட்டத்திற்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சோள உற்பத்தி
அவர் மேலும் தெரிவிக்கையில், ”உள்ளூரில் சோள உற்பத்தி தேவைக்கு போதாத நிலை காணப்படுவதால், சந்தையில் விலை அதிகரிக்கிறது.
தேவையற்ற விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும் முன், அரசாகத் தேவைப்படும் அளவுக்கு சோளத்தை இறக்குமதி செய்வதையே முடிவு செய்துள்ளோம்.
அரசின் இந்த நடவடிக்கை, அத்தியாவசிய பொருட்களின் விலை நிலைத்தன்மையை பாதுகாக்கும் ஒரு முக்கிய முயற்சியாகவும், நுகர்வோருக்கு நிவாரணமாகவும் கருதப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
