மின் கட்டண விடயத்தில் அநுர அரசின் திட்டம் : அம்பலப்படுத்தும் நாமல்
தற்போது உள்ள அரசாங்கம் மின் கட்டணத்தை குறைப்பதாக சொல்லி மக்களை ஏமாற்றி தேர்தலுக்குப் பின்னர் நிச்சயமாக மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அலவ்வ பகுதியில் நேற்று (30.04.2025) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், “அரசாங்கத்தில் உள்ள சிலர் பணம் ஈட்டும் நோக்கில் தற்போது டீசல் மாஃபியாவை ஏற்படுத்தி வருகிறது.
சீரழிக்கும் செயற்பாடு
ஜே.வி.பி அரசாங்கம் 76 வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற வேலைத் திட்டங்களைச் சீரழிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதே தவிர, புதிய வேலைத் திட்டங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை.
பல இடங்களில் உண்மைக்குப் புறம்பான விடயங்களைக் கூறி வருகின்றனர். தேர்தலுக்குப் பின்னர் நிச்சயமாக தற்போதைய அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும்.
அதே போன்று, அரசாங்கம் டீசல் மாஃபியாவை உருவாக்கும் வேலைத் திட்டத்தையும் முன்னெடுத்துள்ளது. எனவே, இதன் பாதிப்பு பொதுமக்களையே சென்றடையும்.
இவ்வாறான மாஃபியா நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக் கூடாதென அரசாங்கத்திடம் கோருவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
