நிறைவுக்கு வந்த அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு
நாடளாவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் தொடங்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் இன்று (13) காலை 8.00 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் (Anuradhapura Teaching Hospital) பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை எதிர்த்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் 24 மணித்தியால வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எனினும், சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தம் தொடர்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரவுள்ள போராட்டம்
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரையில் போராட்டம் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாசவுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலைத் தொடர்ந்து, வேலைநிறுத்தம் தொடருமா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அனுராதபுர கிளையின் செயலாளர் வைத்தியர் சசிக விஜேநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 4 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்