ஜனநாயகத்திற்காக வீதியில் இறங்கியுள்ள இளைஞர்களை அரசாங்கம் மதிக்கவில்லை - சஜித் பிரேமதாச
protest
government
youth
Sajith Premadasa
srilankan economic crisis
irrespect
By Kanna
ஜனநாயகத்திற்காக இளைஞர்கள் வீதியில் இறங்கியுள்ளார்கள் ஆனால் அவர்களின் போராட்டத்தை அரசாங்கம் மதிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜனநாயகத்தை நிலைநாட்டவே நாங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர முன்வந்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த அரசாங்கம் இராணுவத்தினரை பாதுக்கப்பதாக கூறினாலும் யுத்தத்தில் வெற்றிபெற்ற பொன்சேகா உள்ளிட்டவர்களை பழிவாங்கியது யார் என்பது அனைவரும் அறிந்ததே என்றும் அவர் கூறினார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவது, 19ஆவது திருத்தத்தை கொண்டு வருவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை ஒழிப்பது போன்ற தீர்மானத்தை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி