2023 இல் அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் - வெளியானது சுற்றறிக்கை
அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் வழங்குவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய , 2023 ஆம் ஆண்டில் அரசாங்க அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 4000 ரூபாவுக்கு உட்பட்டு இந்த முற்பணத்தை செலுத்துமாறு அனைத்து அமைச்சகங்கள், உள்ளூராட்சி மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு பொது நிர்வாக அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
2022 டிசம்பர் 29 ஆம் திகதியிட்ட சுற்றறிக்கையின்படி, முற்பணத்தை ஏற்பாடு செய்யுமாறு பொது நிர்வாக அமைச்சகம் நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
முழுமையான முற்பணம்
மேலும் முன்பணம் 01.01.2023 அன்று தொடங்கி 28.02.2023 அன்று முடிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 28.02.2023 ஆம் திகதிக்கு பிறகு பணம் செலுத்தக் கூடாது என்றும், 2023ஆம் ஆண்டுக்குள் இந்த முற்பணம் முழுமையாக அறவிடப்பட்ட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.