அரச உத்தியோகத்தர்களுக்கான அவசர அறிவிப்பு - வழங்கப்பட்டுள்ள அவகாசம்
Election Commission of Sri Lanka
Government Employee
Sri Lanka
Government Of Sri Lanka
By Kiruththikan
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ள அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு 12 மணி வரை தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 9ஆம் திகதி தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
29 மாநகர சபைகள், 36 நகர சபைகள் உட்பட 275 பிரதேச சபைகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் நடைபெறவுள்ளது.
வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை கடந்த 21 ஆம் திகதி நண்பகலுடன் நிறைவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி