நாளை போராட்டத்தில் குதிக்கவுள்ள பல அரச தொழிற்சங்கங்கள்

Government Employee SL Protest Budget 2027
By Sathangani Nov 22, 2026 06:05 AM GMT
Report

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச சேவையின் பல தொழிற்சங்கங்கள் தேசிய எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து, அரச தொழிற்சங்கங்கள் ஏற்கனவே பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

அதற்கமைய, நாளைய தினம் (23) நாடளாவிய ரீதியில் தொடர் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்கு அவை திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

செம்மணிப் புதைகுழி தொடர்பான ராஜ் சோமதேவவின் அறிக்கை : நீதி அமைச்சரின் அறிவிப்பு

செம்மணிப் புதைகுழி தொடர்பான ராஜ் சோமதேவவின் அறிக்கை : நீதி அமைச்சரின் அறிவிப்பு

எதிர்ப்புப் போராட்டம்

இதேவேளை, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் நாளை (23) முதல் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

நாளைய தினம் அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் இணைந்து தேசிய கறுப்பு எதிர்ப்புப் போராட்டமொன்றைப் பிரகடனப்படுத்தியுள்ளதாக ஐக்கிய ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் அமில சந்தருவன் குறிப்பிட்டுள்ளார்.

நாளை போராட்டத்தில் குதிக்கவுள்ள பல அரச தொழிற்சங்கங்கள் | Government Employee Unions Protest Tomorrow

அத்துடன், அரசாங்கத்தின் பதிலைப் பொறுத்து எதிர்வரும் வாரத்தில் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைகள் வேலைநிறுத்தப் போராட்டமாக உருவெடுக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய பதிலை வழங்காவிட்டால், நவம்பர் 30 ஆம் திகதியளவில் பாடசாலைக் கட்டமைப்பை மூட நேரிடலாம் எனவும் அமில சந்தருவன் மேலும் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், நாடளாவிய ரீதியிலுள்ள சுகாதார ஊழியர்களும் இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என ஐக்கிய சுகாதார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, நாளைய தினம் நாடு முழுவதிலுமுள்ள வைத்தியசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு முன்பாக எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விண்வெளியிலிருந்து இலங்கைத் தீவின் பிரம்மாண்டமான தோற்றம் : நாசா வீரர் பகிர்ந்த புகைப்படம்

விண்வெளியிலிருந்து இலங்கைத் தீவின் பிரம்மாண்டமான தோற்றம் : நாசா வீரர் பகிர்ந்த புகைப்படம்

சுகாதார ஊழியர் தொழிற்சங்கங்கள்

மேலும், நவம்பர் 30 ஆம் திகதி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் சுகாதார ஊழியர் தொழிற்சங்கங்கள் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக டெம்பிட்டியே சுகதானந்த தேரர் மேலும் கூறினார்.

இதேவேளை, நாளைய தினம் அரச ஊழியர்களினால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தொழிலாளர் போராட்ட நிலையமும் ஆதரவளிக்கும் என அதன் செயலாளர் துமிந்த நாகமுவ குறிப்பிட்டுள்ளார்.

நாளை போராட்டத்தில் குதிக்கவுள்ள பல அரச தொழிற்சங்கங்கள் | Government Employee Unions Protest Tomorrow

உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக எதிர்வரும் இரண்டு வாரங்களில் பல தொழிற்சங்க நடவடிக்கைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, நாளைய தினம் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு முன்பாக எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்கும், நவம்பர் 30 ஆம் திகதி சில துறைகளில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டங்களையும், மேலும் சில துறைகளில் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டங்களையும் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் இது தொடர்பில் உரிய பதிலை வழங்காவிட்டால், இதனை விடவும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதற்குத் தொழிலாளர் போராட்ட நிலையம் தயாராக உள்ளதாகவும் துமிந்த நாகமுவ மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக

யாழ். பல்கலை மோதல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய நடவடிக்கை

யாழ். பல்கலை மோதல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026