அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: கிடைத்தது அமைச்சரவை அங்கீகாரம்
அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படவுள்ள கொடுப்பனவில் 5,000 ரூபாவை வழங்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2024 வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள 10,000 ரூபா கொடுப்பனவில் இருந்து 5000 ரூபா ஜனவரி மாதம் முதல் வழங்கப்படவுள்ளது.
அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
நிதி நிவாரணம்
அத்துடன், இந்த வருட தைப்பொங்கல் பண்டிகையின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவு நிதி நிவாரணம் கிடைக்கும் என ரணில் விக்ரமசிங்க ஏறகனவே தெரிவித்திருந்தார்.
அதேவேளை, அரச ஊழியர்களுக்காக வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள 10,000 ரூபா கொடுப்பனவு போதாது என அரச ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |