சம்பளத்தை அதிகரித்துவிட்டு மீள சூறையாடும் அநுர அரசு : கடுமையாக சாடும் நாமல்
அரசாங்கம் சம்பளத்தை அதிகரித்து விட்டு அதிகரித்த சம்பளத்திற்கு அதிக வரியை அறவிட்டு மீள பெற்றுக்கொள்கின்றது என மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (22) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் பேசிய அவர், தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe)15 வருடங்களுக்கு முன் பேசியதை அப்படியே இன்றும் பேசுகிறார். அன்று கூறிய பொய்களை மீண்டும் ஆட்சிக்கு வந்தும் பேசுகிறீர்கள்.
சம்பள அதிகரிப்பு
அரசாங்கத்தின் சம்பள அதிகரிப்பை பாராட்டுகின்றேன. சம்பள அதிகரிப்பின் பலனை ஊழியர்கள் பெற்றுக் கொள்கிறார்களா இல்லை. ஏனென்றால் அரசாங்கத்தின் வரி கொள்கைக்கிணங்க அதிகரித்த சம்பளம் மீள பெற்றுக் கொள்கிறது.
அனைத்து அரச நிறுவனங்ளிலும் அரசியல் பழிவாங்கல் நடக்கிறது. அத்தோடு தொழிற் சங்கங்களின் முடக்கமும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இன்று அரசாங்கம் கூறுகிறது தொழிற் சங்கங்கள் பெரும் தலையிடி என்று.
நாட்டில் தொழிற்சங்கங்களை இயக்கியது நீங்களே. கல்விக் கொள்கை பற்றி பேசுகிறீர்கள். பாடசாலைக்கு செல்லாமல் தொழிற்சங்கம் செய்தவர்கள் தானே நீங்கள். இன்று அரசில் பலியெடுக்கிறீர்கள், உங்களின் குறைகளை நிவர்த்தியுங்கள்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
