ஒரு இலட்சத்துக்கும் அதிக சம்பளம் பெறும் அரச ஊழியர்கள்
நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களுக்கு போனஸ்
எரிபொருள் கூட்டுத்தாபனம் உட்பட நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களுக்கு வருடத்திற்கு மூன்று போனஸ் வழங்கப்படுதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் மற்றும் எரிவாயு கிடைக்காதது அரசாங்கத்தின் தவறே தவிர மக்களின் தவறல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான மாதாந்த சம்பளம்
எரிபொருள் கூட்டுத்தாபனம், துறைமுகம், மின்சார சபை போன்ற நிறுவனங்களின் ஊழியர்கள் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான மாதாந்த சம்பளத்தைப் பெற்று வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார் மயமாக்குவதே மிகவும் பொருத்தமானது எனவும் தெரிவித்தார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.