போர் பதற்றத்தின் எதிரொலி - அதிரடியாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள்
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் (IPL) போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா (India) - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
போர் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்றுள்ள நாடுகளின் வீரர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் அறிவிக்கப்படும்
போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் ஐபிஎல் தொடரை நிறுத்தி வைப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடத்தியது.
இந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நிறுத்தி வைப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்படும் ஐபிஎல்லின் மீதமிருக்கும் போட்டிகல் எப்போது நடைபெறும்? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
விளக்குகள் அணைக்கப்பட்டு
இதேவேளை, நேற்று இரவு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய தாக்குதலின் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
தர்மசாலாவில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகள் போட்டியிட்டிருந்தன.
அண்டை நகரங்களான ஜம்மு மற்றும் பதான்கோட்டில் விமானத் தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தர்மசாலா திடலில் விளக்குகள் அணைக்கப்பட்டு போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
